ADDED : செப் 21, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றிய கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜ், அமிர்தம் ராஜேந்திரன், பி.டி.ஓ.,கள் துரைமுருகன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., தினகர்பாபு வரவேற்றார். அலுவலக உதவியாளர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள், பொறியாளர்கள், மண்டல துணை பி.டி.ஓ.,கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, மழைக்காலத்தையொட்டி ஒன்றியத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.