ADDED : டிச 04, 2024 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; திருநாவலுார் அருகே ஆற்று மண் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருநாவலுார் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிழக்கு மருதுாரில் உள்ள கெடிலம் ஆற்றில், தொப்பையாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்திரகாச பாண்டியன்,44; என்பவர் அரசு அனுமதியின்றி ஆற்று மணலை திருடியது தெரிந்தது.
இதையடுத்து, சந்திரகாச பாண்டியனை கைது செய்து, ஆற்று மணலுடன் இருந்த மாட்டு வண்டியை திருநாவலுார் போலீசார் பறிமுதல் செய்தனர்.