/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இணைப்பு சாலையின் குறுக்கே வழி; டோல்கேட் அருகே விபத்து அபாயம்
/
இணைப்பு சாலையின் குறுக்கே வழி; டோல்கேட் அருகே விபத்து அபாயம்
இணைப்பு சாலையின் குறுக்கே வழி; டோல்கேட் அருகே விபத்து அபாயம்
இணைப்பு சாலையின் குறுக்கே வழி; டோல்கேட் அருகே விபத்து அபாயம்
ADDED : ஏப் 15, 2025 06:30 AM

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே இணைப்பு சாலை பகுதியில் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தியதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
உளுந்துார்பேட்டை, செங்குறிச்சி டோல்கேட் முதல் பாடலுார் வரையில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு கடந்த 2009 ம் ஆண்டு முதல் வாகனப் போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இதில், உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே உள்ள உளுந்துார்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளின் இணைப்புச் சாலையின் குறுக்கே வாகனங்கள் சென்ற போது விபத்துகள் ஏற்பட்டன.
மேலும், டோல்கேட் பகுதியில் இருந்து உளுந்துார்பேட்டை நகர் மேம்பாலம் வழியாக செல்லும் போது மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. விபத்துக்களை தடுக்க போலீசார் இணைப்பு சாலை பகுதியில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் குறுக்கே செல்லாதபடி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே பேரிகார்டுகள், சிமெண்ட் கட்டைகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தினர்.
இந்நிலையில், இணைப்பு சாலையின் குறுக்கே வைத்திருந்த தடுப்புகளை சிலர் அகற்றி விட்டு வாகனங்கள் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தினர்.
இதன் காரணமாக சாலையின் குறுக்கே சென்ற தனியார் பஸ் மீது டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதி 12 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை தொடர்ந்து இணைப்பு சாலை சந்திப்பு பகுதியை முழுதுமாக மூடினர்.
கடந்த இரண்டு நாட்களாக இணைப்பு சாலை சந்திப்பு பகுதியில் வாகனங்கள் செல்ல மீண்டும் வழி ஏற்படுத்தியுள்ளதால் மீண்டும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விபத்தை தடுக்க இணைப்பு சாலையில் நிரந்தரமான கான்கிரீட் கட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.