/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை விரிவாக்க பணி கோட்ட பொறியாளர் ஆய்வு
/
சாலை விரிவாக்க பணி கோட்ட பொறியாளர் ஆய்வு
ADDED : நவ 22, 2025 04:55 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுாரில் சாலை விரிவாக்க பணியை கோட்ட பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி முதல் திருவண்ணாமலை செல் லும் பிரதான மாநில நெடுஞ் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி சு.குளத்துார் முதல் கடுவனுார் வரை 3 கி.மீ., துாரம் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணியில் சாலையின் வேலை முன்னேற்றம் மற்றும் தரத்தினை கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் நாகராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது சங்கராபுரம் உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் மணிமொழி, உதவி பொறியாளர் மணிவண்ணன் உடன் இருந்தனர்.
மேலும் சாலைப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலைத்துறை அலு வலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

