/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை பாதுகாப்பு குழு மாவட்ட ஆய்வு கூட்டம்
/
சாலை பாதுகாப்பு குழு மாவட்ட ஆய்வு கூட்டம்
ADDED : செப் 28, 2024 07:13 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எஸ்.பி., ரஜத்சதுர்வேதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், நெடுஞ்சாலைகளின் குறுக்கே வாகனங்கள் செல்லும் இடங்களில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். சின்னசேலம் அம்மையகரம், கனியாமூர், ஏமப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள், தென்கீரனுார் பாலம் அருகே சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என போக்குவரத்து துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
சாலையோர கழிவுநீர் கால்வாய்களை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து பேசிய கலெக்டர், தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைத்து கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தப்படும். தொடர்ந்து 2 கி.மீ., இடைவெளியில் நெடுஞ்சாலையில் பிரதிபலிப்பான்கள், ரம்பிள் ஸ்ட்ரிப் உள்ளிட்டவைகளை பொருத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், டோல்கேட் மேலாளர்கள், சாலை பாதுகாப்பக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.