/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை பணியாளர்கள் நுாதன ஆர்ப்பாட்டம்
/
சாலை பணியாளர்கள் நுாதன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 20, 2025 10:55 PM

கள்ளக்குறிச்சி, ; தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி நுாதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார்.
துணை தலைவர் கிருஷ்ணன், இணை செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சாமி துரை, அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம், மாவட்ட தலைவர் ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், சாலை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நிறைவேற்றக் கோரி சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற சாலை பணியாளர்களை கைது செய்து கொடுமைப்படுத்திய தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறையை கண்டிப்பது, தொழிற்சங்க விரோத போக்கு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இதில் சாலை பணியாளர்கள் முகமூடி அணிந்துக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். இதில் சாலை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.