/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்
/
சாலை பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 20, 2024 04:40 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாரிமுத்து, இணை செயலாளர் பெரியசாமி, மாநில செயற்குழு ஜேம்ஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் தண்டபாணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சாமிதுரை கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசின் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவையும், நெடுஞ்சாலைத்துறை சீரமைக்கும் நடவடிக்கையும் கைவிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
தொழில் நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கு ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.