/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை பணியாளர் சங்கம் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
/
சாலை பணியாளர் சங்கம் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
ADDED : ஜூலை 30, 2025 11:27 PM

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் முத்து, மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சாமிதுரை, நில அளவையர் ஒன்றிப்பு மாநில நிர்வாகி செந்தில்முருகன், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துதல், பணியின் போது உயிரிழந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குதல், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து, தனியார் மையமாக்குவதை கைவிடுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகள் தீப்பந்தியம் ஏந்தியபடி பங்கேற்று, கோஷம் எழுப்பினர்.