/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாத்திர வியாபாரியிடம் வழிப்பறி: மர்ம நபர்கள் துணிகரம்
/
பாத்திர வியாபாரியிடம் வழிப்பறி: மர்ம நபர்கள் துணிகரம்
பாத்திர வியாபாரியிடம் வழிப்பறி: மர்ம நபர்கள் துணிகரம்
பாத்திர வியாபாரியிடம் வழிப்பறி: மர்ம நபர்கள் துணிகரம்
ADDED : டிச 09, 2024 11:53 PM
சின்னசேலம்; சின்னசேலம் அருகே பாத்திர வியாபாரியிடம் மொபைல்போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த கைகளத்துாரைச் சேர்ந்தவர் தங்கராஜ், 43; இவர் டாட்டா ஏஸ் வாகனத்தில் பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 8ம் தேதி சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் சென்றவர் இரவு 9:00 மணி அளவில் கைகளத்துார் திரும்பினார்.
வி.கூட்ரோடு அருகே வந்தபோது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர், தங்கராஜை வழிமறித்து அவர் வைத்திருந்த மொபைல்போன் மற்றும் 15 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்து தப்பினர்.
தங்கராஜ் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்கள் இருவரை தேடி வருகின்றனர்.