/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.26.70 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.26.70 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.26.70 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.26.70 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
ADDED : அக் 28, 2024 05:34 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் 26.70 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 39; இவருக்கு, மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த அண்ணாமலை மகன் சக்கரவர்த்தி என்பவர் அறிமுகமானார். இந்நிலையில், தனக்கு முக்கிய பிரமுகர்கள் பலரை தெரியும், யாருக்கேனும் அரசு வேலை வேண்டுமானால் வாங்கித் தருகிறேன் என, பாலாஜியிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் என பலர், கடந்த இரண்டு ஆணடுகளுக்கு முன்பு, சக்கரவர்த்தியிடம் 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்ற சக்கரவர்த்தி, திருப்பத்துாரை சேர்ந்த சாந்தகுமார், சென்னை, மதுரவாயலை சேர்ந்த பழனி மனைவி ஜெயந்தி ஆகியோருக்கு, வங்கி மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கித் தராமல், 3 பேரும் ஏமாற்றி வந்துள்ளனர். பணத்தை திருப்பி கேட்டும் தரவில்லை.
இதுகுறித்த பாலாஜி கொடுத்த புகாரின் பேரில், சக்கரவர்த்தி, சாந்தகுமார், ஜெயந்தி ஆகிய 3 பேர் மீதும் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.