/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூட்டிய வீட்டை உடைத்து ரூ.27 லட்சம் நகை, பணம் கொள்ளை: கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்

ADDED : அக் 28, 2025 06:19 AM

ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த கீழத்தேனுாரை சேர்ந்தவர் சவுகத்அலி, 50; இவர், தனது வீட்டின் அருகே மோட்டார் ரீவைண்டிங் கடை நடத்தி வருகிறார். கடந்த 25ம் தேதி சவுகத்அலியும், இவரது மனைவி சும்சுனிஷா வும் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, சவுகத்அலியின் வீட்டின் முன்பக்க கதவு திறந்த கிடப்பதாக சகோதரர் சலீம், அண்ணன் சவுகத் அலிக்கு தகவல் தெரிவித்தார். சலீம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவிலிருந்த 30 சவரன் நகைகள், ரூ. 3 லட்சம் பணம் கொள்ளைபோனதுதெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 27 லட்சம்.
தகவலறிந்த திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்தீபன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து,கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.