/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகத்தில் எஸ்.பி., ஆய்வு
/
தியாகதுருகத்தில் எஸ்.பி., ஆய்வு
ADDED : அக் 18, 2024 06:54 AM
தியாகதுருகம்: துணை முதல்வர் உதயநிதி நாளை கள்ளக்குறிச்சி வருவதை யொட்டி தியாகதுருகத்தில் எஸ்.பி., ரஜத் சதுர்வேதி ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடைபெறும் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி வருகிறார்.
அவருக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மணலுார்பேட்டை, மாடம்பூண்டி கூட்ரோடு, தியாகதுருகம், மாடூர் டோல்கேட், நான்கு முனை சந்திப்பு ஆகிய இடங்களில் கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர்.
இதையடுத்து நேற்று மாலை பஸ் ஸ்டாண்ட் அருகே எஸ்.பி., ரஜத் சதுர்வேதி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழக்கினார்.
கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜ், இன்ஸ்பெக்டர் மலர்விழி, சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.