/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருவரங்கம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
/
திருவரங்கம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
ADDED : செப் 05, 2025 07:48 AM

ரிஷிவந்தியம்; திருவரங்கம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
வாணாபுரம் அடுத்த திருவரங்கம் மாரியம்மன் கோவிலில் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி காப்பு கட்டுதலுடன் சாகை வார்த்தல் நிகழ்ச்சி துவங்கியது. இந்நிலையில், சுவாமி தரிசனம் செய்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் கோவிலை பூட்டினர். வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.
தொடர்ந்து, வருவாய்த்துறை அலுவலர்கள் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்புடன் மாரியம்மன் கோவில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து கூழ் குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு பெரிய கொப்பரையில் சாகை வார்க்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.