/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் சமஸ்டி உபநயனம்
/
திருக்கோவிலுாரில் சமஸ்டி உபநயனம்
ADDED : பிப் 20, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் சார்பில் திருக்கோவிலுாரில் நான்கு சிறுவர்களுக்கு சமஸ்டி உபநயனம் செய்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு பிராமணர்கள் சங்க, திருக்கோவிலுார் கிளையின் சார்பில், சமஸ்டி உபநயனம் செய்வதற்கான ஏற்பாடுகளை திருக்கோவிலுார், மணம்பூண்டி கிளை நிர்வாகிகள் செய்து வந்தனர்.
நேற்று காலை 9:30 மணிக்கு வாசவி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியர் தலைமை தாங்கினார். சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் குமார், மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், நான்கு சிறுவர்களுக்கு சமஸ்டி உபநயனம் செய்து வைக்கப்பட்டது.

