ADDED : அக் 13, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே மணல் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, கூத்தக்குடி மணிமுக்தா ஆறு வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் முனுசாமி, 26; என்பவர் மணல் திருடி செல்வது தெரியவந்தது. முனுசாமியை கைது செய்து, மணலுடன் கூடிய டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.