தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாநில அளவிலான கிக் பாக்சிங் போட்டி சங்கராபுரம் மாணவர்கள் வெற்றி

 மாநில அளவிலான கிக் பாக்சிங் போட்டி சங்கராபுரம் மாணவர்கள் வெற்றி

 மாநில அளவிலான கிக் பாக்சிங் போட்டி சங்கராபுரம் மாணவர்கள் வெற்றி


ADDED : ஜூன் 05, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: தேனியில் நடந்த மாநில கிக் பாக்சிங் போட்டியில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த 11 மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.

தேனி எஸ்.டி.ஏ.டி., உள் விளையாட்டரங்கத்தில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிகள் நடந்தது.

சென்னை, மதுரை, காஞ்சிபுரம். கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

மியூசிக்கல் பார்ம் மற்றும் கிக் பாக்சிங் உட்பட வெவ்வேறு பிரிவுகளாக நடந்த போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில், சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த 17 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெவ்வேறு எடை பிரிவுகளில் போட்டி நடந்தது.

இதில், மாணவர்கள் பிரத்திமனா, பேரரசு, சுதர்ஷன், நிஷாலினி ஆகியோர் தலா ஒரு வெள்ளி பதக்கம், சாய்சரண் 2 வெள்ளிப் பதக்கங்களும், மோகித் ஸ்ரீனிவாசா, லோகேஷ், வைஷ்ணவி, கோகுல் ஆகியோர் தலா ஒரு வெண்கல பதக்கம் என மொத்தம் 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கிக் பாக்சிங் அசோசியேசன் செயலாளர் இஸ்மாயில், பயிற்சியாளர் சூரியமூர்த்தி ஆகியோர் பரிசு வழங்கி வாழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us