/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் வள்ளலார் மன்ற கார்த்திகை மாத பூச விழா
/
சங்கராபுரம் வள்ளலார் மன்ற கார்த்திகை மாத பூச விழா
சங்கராபுரம் வள்ளலார் மன்ற கார்த்திகை மாத பூச விழா
சங்கராபுரம் வள்ளலார் மன்ற கார்த்திகை மாத பூச விழா
ADDED : டிச 10, 2025 08:31 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் கார்த்திகை மாத பூச விழா நடந்தது.
மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். சன் மார்க்க இளைஞரணி நிர்வாகிகள் சந்திரசேகர், தங்கமணி, ராதாகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
முன்னாள் வியாபாரிகள் சங்க தலைவர் மூர்த்தி வரவேற்றார். வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார் முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் ரவி, நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு ஜோதி தரிசனத்தை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரகாஷ் நன்றி கூறினார்.