/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யும் பணி துவக்கம்
/
பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யும் பணி துவக்கம்
ADDED : மே 29, 2025 01:29 AM

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணி துவங்கியது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,176 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் வரும் ஜூன், 2ம் தேதி திறக்கப்பட உள்ளன.
பள்ளிகள் திறப்பதற்கு முன் வளாகத்தை சுத்தம் செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சி.இ.ஓ., கார்த்திகா உத்தரவிட்டார். இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நடந்தது.
பள்ளி வளாகத்தில் செடிகள், முட்புதர்களை அகற்றுதல், வகுப்பறையில் உள்ள கரும்பலகைக்கு புதிய வண்ணம் பூசுதல், தண்ணீர் தொட்டியை குளோரின் மூலம் சுத்தம் செய்தல், அனைத்து மாணவ, மாணவியருக்கும் புத்தகம், சீருடை வழங்க ஏற்பாடு செய்தல், கால அட்டவணை தயாரித்தல், கழிவறை சுத்தம் செய்தல், மின்சாதன பொருட்கள் சரியாக இயங்குகிறதா என பரிசோதனை செய்தல் உட்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.