/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் ஓட்டிய பள்ளி மாணவர்கள்: போலீசார் வழக்கு
/
பைக் ஓட்டிய பள்ளி மாணவர்கள்: போலீசார் வழக்கு
ADDED : மார் 30, 2025 11:25 PM
சங்கராபுரம்; சங்கராபுரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டி சென்ற, பள்ளி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சங்கராபுரம், கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பிளஸ் 2 மாணவர்கள், 6 பேர் விலை உயர்ந்த பைக்கில், அதிக சத்தத்துடன் வேகமாக சென்றனர். போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து, ஒட்டி சென்ற, 6 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மாணவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையம் வரவழைத்து, உரிய அறிவுரைகளை வழங்கினர். மாணவர்கள் மீது, ஹெல்மெட், அதி வேகம், 18 வயதுக்கு கீழே வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் அபராதம் செலுத்தக்கோரி, வாகனங்களை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.