ADDED : அக் 14, 2024 08:38 PM
கள்ளக்குறிச்சி : கண்டாச்சிமங்கலத்தில் குட்கா விற்றவரையும், அவருக்கு சப்ளை செய்தவரையும் போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்த தினேஷ்குமார், 35; தனது பெட்டி கடையில், குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.
உடன், தினேஷ்குமாரினை கைது செய்து, கடையில் இருந்த 9,240 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கைதான தினேஷ்குமார் அளித்த தகவலின் படி, மடம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சப்ளை செய்வதும், கள்ளக்குறிச்சியை சேர்ந்த சரவணன் என்பவர் மொத்த வியாபாரி எனவும் தெரிந்தது.
இதையடுத்து, சப்ளை செய்த மடம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்,50; என்பவரை கைது செய்தனர். மொத்த வியாபாரி சரவணன் மீது வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.