sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மானிய விலையில் இ-ஸ்கூட்டர் பெற சேவை தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்

/

 மானிய விலையில் இ-ஸ்கூட்டர் பெற சேவை தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்

 மானிய விலையில் இ-ஸ்கூட்டர் பெற சேவை தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்

 மானிய விலையில் இ-ஸ்கூட்டர் பெற சேவை தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்


ADDED : பிப் 12, 2026 05:35 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணையம் சார்ந்த சேவை தொழிலாளர்கள் மானிய விலையில் புதிய இ-ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.20,000 மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில், உணவு விநியோகம், போக்குவரத்து மற்றும் ப்ரீலான்ஸ் பணிகளில் ஈடுபடும் இணையம் சார்ந்த தொழிலாளர்கள், http://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு 23 ஏ, தாய் இல்லம், அண்ணா நகர், முதல் தெரு, கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இணையம் சார்ந்த ஜிஐஜி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். இத்திட்டம் இரு சக்கர மின்சார வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பயனாளி தமிழகத்தில் வசிப்பவராகவும், போக்குவரத்துத் துறையால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். பதிவு, புதுப்பித்தல், உதவி தொகை பெறுதல் ஆகிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் http://tnuwwb.tn.gov.in என்ற இணைய தள முகவரி வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நலவாரியத்தில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் ஏதும் இல்லை. புதிய உறுப்பினராக சேர்ந்து நலத்திட்ட நிதியுதவிகள் பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us