/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சேவா பாரதி கல்வி தான மையம் துவக்க விழா
/
சேவா பாரதி கல்வி தான மையம் துவக்க விழா
ADDED : டிச 08, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் ஒன்றியம் மேல்நாரியப்பனுாரில் சேவா பாரதி அமைப்பின் கல்வி தான மையம் துவக்க விழா நடந்தது. சேவா பாரதியின் மாவட்ட தலைவர் சின்னதம்பி தலைமை தாங்கினார்.
செயலாளர் மாலன், பொருளாளர் அரவிந்தன் முன்னிலை வகித்தனர். அப்பகுதியை சேர்ந்த 20 மாணவர்கள் தேர்வு செய் யப்பட்டு, அவர்கக்கு கல்வி தான மையத்தின் சார்பில் இலவச டியூசன் வகுப்புகள் வழங்கப்படுகிறது.
மேலும் இதேபோல் அனைத்து பகுதிகளிலும் ஆசிரியை நியமித்து இலவச கல்வி சேவை தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பிரியதர்ஷன், சசிராஜன், கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

