/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர்
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர்
வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர்
வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர்
ADDED : டிச 04, 2025 05:33 AM

மூங்கில்துறைப்பட்டு: டிச 4-: மூங்கில்துறைப்பட்டு புதுப்பேட்டையில் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுபேட்டை புது தெருவில் கழிவு நீர் கால்வாய்காள் அனைத்தும் மண் கொட்டி அடைத்தும், சிலர் வீடும் கட்டி ஆக்கிரமித்துவிட்டனர். இதனால் சாலையோரம் உள்ள வாய்க்கால் ஆங்காங்கே மறைந்து கிடக்கிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
கழிவுநீரால் கொசுக்கள் அதிகமாகியுள்ளது. மலேரியா டெங்கு போன்ற காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை மீட்டு கழிவுநீர் தேங்காமல் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.