/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கஞ்சா கலாசாரத்தால் தள்ளாடும் சங்கராபுரம்; தடுப்பு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
/
கஞ்சா கலாசாரத்தால் தள்ளாடும் சங்கராபுரம்; தடுப்பு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
கஞ்சா கலாசாரத்தால் தள்ளாடும் சங்கராபுரம்; தடுப்பு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
கஞ்சா கலாசாரத்தால் தள்ளாடும் சங்கராபுரம்; தடுப்பு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
ADDED : அக் 13, 2025 10:49 PM
சங்கராபுரம் வளர்ந்து வரும் பகுதி. இங்கு சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து அரசு பஸ்சில், 20 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர்கள் இருவரை போலீசார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, அதனை திருப்பதி வழியாக அரசு பஸ்சில் சங்கராபுரம் பகுதிக்கு எடுத்துவந்து சிறு சிறு பொட்டலங்களாக கட்டி, ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்கின்றனர். கஞ்சா இலையை மட்டும் தனியாகவும், கஞ்சா சிகரெட், கஞ்சா சாக்லெட் ஆகவும் வித விதமாக விற்பனை செய்கின்றனர்.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா எளிதாக கிடைப்பதால், மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகி தங்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழித்துக்கொள்கின்றனர். கஞ்சா பழக்கிற்கு ஆளாகும் மாணவர்கள், இளைஞர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடவும் அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சங்கராபுரம் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா போதை பொருள் விற்பனையால், இளைஞர்கள், மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் அவல நிலை நீடிக்கிறது. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வர ஒரு சில அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் உதவி செய்கின்றனர்.
எனவே, கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார், போக்குவரத்து கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.