/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமியை திருமணம் செய்த பழ வியாபாரி மீது வழக்கு
/
சிறுமியை திருமணம் செய்த பழ வியாபாரி மீது வழக்கு
ADDED : அக் 13, 2025 12:23 AM
திருவெண்ணெய்நல்லுார்; உளுந்துார்பேட்டை அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பழ வியாபாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் அய்யனார், 26; பழ வியாபாரி. இவர், விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து கடந்த ஜூன் மாதம் இரு வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.
அப்பெண் தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
சிறுமிக்கு திருமணம் செய்து கர்ப்பமாக இருப்பது குறித்து டாக்டர்கள் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அய்யனார் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.