ADDED : மார் 17, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்,: சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் அஞ்சல் துறை சார்பில் சிறுசேமிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஊராட்சி தலைவர் பாப்பாத்தி தலைமை தாங்கினார். துணை அஞ்சலக அதிகாரி உமா, அஞ்சலக உதவியாளர் ரம்யா முன்னிலை வகித்தனர்.
அய்யப்பன், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மூலம், சிறு சேமிப்பு திட்ட முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஊராட்சி செயலாளர் ராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.