/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளியில் மாணவியை கடித்த பாம்பு
/
பள்ளியில் மாணவியை கடித்த பாம்பு
ADDED : டிச 17, 2025 06:03 AM

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், அதே ஊரை சேர்ந்த கோவிந்தசாமி மகள் நவீதா, 7; இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை, 3:00 மணிக்கு, பள்ளி வளாகத்தில் சக மாணவர்களுடன் நவீதா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது காலில் பாம்பு கடித்தது.
ஆசிரியர்கள், நவீதாவை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவி நவீதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், 'நெடுமானுார் பள்ளி வளாகம் முழுதும் புதர்கள் மண்டி விஷ ஜந்துகளின் புகலிடமாக உள்ளது. மாணவர்களின் நலன் கருதி புதர்களை அகற்றி துாய்மை பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

