UPDATED : அக் 12, 2026 06:02 PM
ADDED : அக் 12, 2026 06:00 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த சோலார் விண்ணப்ப சிறப்பு முகாமில் ஏராளமானோர் விண்ணப்பம் வழங்கினர்.
கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்டம், கள்ளக்குறிச்சி கோட்டம் சார்பில் சேவா சேது அபியான் திட்ட சோலார் விண்ணப்ப சிறப்பு முகாம் வி.ஏ.எஸ்., திருமண மஹாலில் நடந்தது.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ் குமார் தலைமை தாங்கினார். செயற் பொறியாளர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். செயற் பொறியாளர் கணேசன் வரவேற்றார்.
செயற் பொறியாளர்கள் சுப்புராஜ், முருகேசன், குமரேசன் சோலார் திட்டம் செயல்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். சிறப்பு விருந்தினர் அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் கள்ளக்குறிச்சி கோட்டத்தைச் சேர்ந்த அனைத்து மின் பொறியாளர்கள் பங்கேற்றனர். பல்வேறு சோலார் விற்பனையாளர்கள் மற்றும் பொதுத்துறை வங்கி சார்பில் கனரா வங்கி, எஸ்.பி.ஐ., வங்கி அலுவர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த சிறப்பு முகாமில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உதவி மின் பொறியாளர் நாகராஜன் நன்றி கூறினார்.
