/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விஜயை யாரோ ஆட்டி வைக்கின்றனர் ம.தி.மு.க நிர்வாகி காட்டம்
/
விஜயை யாரோ ஆட்டி வைக்கின்றனர் ம.தி.மு.க நிர்வாகி காட்டம்
விஜயை யாரோ ஆட்டி வைக்கின்றனர் ம.தி.மு.க நிர்வாகி காட்டம்
விஜயை யாரோ ஆட்டி வைக்கின்றனர் ம.தி.மு.க நிர்வாகி காட்டம்
ADDED : டிச 26, 2025 05:15 AM

உளுந்துார்பேட்டை: த.வெ.க., தலைவர் விஜயை யாரோ, ஆட்டி வைக்கின்றனர் என, ம.தி.ம.க., மாநில பொருளாளர் தெரிவித்துள்ளார்.
உளுந்துார்பேட்டையில் ம.தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் செந்திலதிபன் பங்கேற்று, சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது:
வைகோ தமிழக அரசியலில் மிகவும் வலிமைமிக்கவர். அவர் தனது, 11வது நடைபயணத்தை வரும், ஜன., 2ம் தேதி திருச்சியில் இருந்து துவங்க உள்ளார். தமிழகத்தில் சனாதன சக்திகளுக்கு இடம் கொடுக்க கூடாது, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க., வெற்றி பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை வரை சமத்துவ நடைபயணம் செல்கிறார். இந்த நடை பயணத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
த.வெ.க., தலைவர் விஜயை யாரோ ஆட்டி வைக்கின்றனர். பிறர் எழுதிக்கொடுக்கும் வசனத்தை பேசி பழக்கப்பட்டவர். போக, போக அவர் யார் என தெரியும், விஜயின் சாயம் வெளுக்கும். பீகாரை போல தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் தமிழகத்திலும் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்தால் அது நடக்காது. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள திருப்பரங்குன்றம் பிரச்னை மூலம் மதக்கலவரத்தை ஏற்படுத்த பா.ஜ., முயல்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அதை தடுத்து நிறுத்தி, சரியாக கையாண்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. திருப்பரங்குன்றம் பிரச்சினையில் தமிழக அரசின் நிலைப்பாடு சரியானது. அதை பாராட்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

