ADDED : பிப் 04, 2024 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பள்ளிக்குச் சென்ற சிறுவன் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் கம்பீர்,15; அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார் கம்பீர், கடந்த ஜனவரி 30ம் தேதி காலை 9 மணியளவில் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாய் சத்யா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.