ADDED : டிச 20, 2025 07:11 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் விஜய், 28; கடந்த 17ம் தேதி இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அதன் பின்பு, சங்கராபுரத்தில் உள்ள நண்பரை சந்திக்க செல்வதாக விஜய் குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டு சென்றார்.
சிறிது நேரத்திற்கு பிறகு, என்னை தேடவேண்டாம் என வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய விஜய், மொபைல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். உடன் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் விஜயை தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் காணமல் போன மகன் விஜயை கண்டுபிடித்து தரக்கோரி இவரது தாய் ராணி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

