ADDED : அக் 22, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேர் விஸ்வநாதர் கோவிலில் பாலமுருகப்பெருமானுக்கு மகா கந்தசஷ்டி பெரு விழா நேற்று துவங்கியது.
விழாவையொட்டி நேற்று மாலை 6:30 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜை, அபிஷேக ஆராதனையுடன் காப்புக்கட்டுதல் நடந்தது. தொடர்ந்து 3 நாட்களுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை சுவாமி உள்பிரகாரம் உலா நடக்கிறது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அக்.27ல் சூரசம்ஹாரம், அக்.28ல் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதேபோல் கமலா நேரு தெரு சித்தி விநாயகர் காமாட்சி அம்மன், இந்திலி பாலமுருகன், சிதம்பரேஸ்வரர், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர் கோவில், பெருவங்கூர் சாலை சங்கரலிங்க சுவாமி சித்தர் பீடத்தில் கந்தசஷ்டி பெருவிழா நேற்று துவங்கியது.