/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., திடீர் ஆய்வு
/
போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., திடீர் ஆய்வு
ADDED : ஜூலை 27, 2025 11:11 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி எஸ்.பி., மாதவன் நேற்று ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய எஸ்.பி., யாக மாதவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். நேற்று சங்கராபுரம் போலீஸ் நிலையம் வந்த எஸ்.பி., அங்கு ஆய்வு செய்தார்.
போலீஸ் நிலையத்தை பார்வையிட்டு, அங்கு தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள், கார்களை ஒழுங்குபடுத்த உத்தரவிட்டார்.
போலீஸ் நிலைய ஆவணங்கள், குற்ற வழக்கு பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
திருட்டு, கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்ற வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களை விரைவாக கைது செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்தீபன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, தனசேகரன் உடனிருந்தனர்.