UPDATED : அக் 16, 2026 03:08 PM
ADDED : அக் 16, 2026 03:06 PM

ரிஷிவந்தியம்: சின்னக்கொள்ளியூர் தொடக்க பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் நடந்த கலைத்திருவிழா போட்டியில் பரதநாட்டியத்தில் இரண்டாமிடம் பிடித்த மாணவிகளை எஸ்.பி., பாராட்டினார்.
கள்ளக்குறிச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி சில தினங்களுக்கு முன் நடந்தது.
இதில், 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு 9 வகையான போட்டிகளும், 3 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 15 வகையான போட்டிகள், 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 18 வகையான போட்டிகளும் நடத்தப்பட்டது.
இதில், 3 முதல் 5ம் வகுப்பு மாணவிகளுக்கு நடந்த பரதநாட்டியம் குழு போட்டியில் சின்னக்கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவியர்கள், எஸ்.பி., ஷஹ்னாஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி உடனிருந்தார்.
