/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு
/
சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு
ADDED : டிச 01, 2025 05:05 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., மாதவன் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில், போலீஸ் ஸ்டேஷன் அலுவலக பதிவேடுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.
நவீன யுக்திகளை கையாண்டு தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். போலீஸ் ஸ்டேஷனில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் ஸ்டேஷன் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்தீபன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

