/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம்
/
பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம்
ADDED : ஜன 17, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது.
சின்னசேலம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆண்டாள் ரங்கநாதருடன் ஐக்கியமான கூடாரவல்லி வரலாற்றினை ஜெயக்குமார் சுவாமிகள் நடித்து காட்டினார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராமர் விக்ரகத்தை ரங்கநாதராக பாவித்து, சீதாவை ஆண்டாளாக பாவித்து கூடாரவல்லி உற்சவம் நடத்தப்பட்டது. பரத் ஐயர் மற்றும் மகிளா சபா பெண்கள் மாலையை மணாளனுக்கு போடுவதைப் போல நடித்துக் காட்டினர்.