தலைவராக விஜய் இன்னும் உயரவில்லை : சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்
தலைவராக விஜய் இன்னும் உயரவில்லை : சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்
ADDED : ஆக 22, 2025 08:22 PM

சென்னை: '' நடிகர் என்ற நிலையில் இருந்து அவர் தலைவர் என்ற நிலைக்கு இன்னமும் தவெக தலைவர் விஜய் உயரவில்லை,'' மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த தவெகவின் 2வது மாநில மாநாட்டில் விஜய் பேசும் போது, முதல்வர் ஸ்டாலினை அங்கிள் எனக் குறிப்பிட்டு விமர்சித்தார். ஸ்டாலின் அங்கிள்… வாட் அங்கிள்… ராங் அங்கிள்… எனவும் கூறினார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
த.வெ.க. மாநாட்டில் அதன் தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினை 'அங்கிள்' என்று அழைத்தது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் அற்ற வார்த்தை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு பதிலாக தரம் தாழ்ந்த முறையில் அவ்வாறு பேசியது கண்டிக்கத்தக்கது. நடிகர் என்ற நிலையில் இருந்து அவர் தலைவர் என்ற நிலைக்கு இன்னமும் உயரவில்லை என்பதையே அவருடைய உரை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் சண்முகம் கூறியுள்ளார்.