ADDED : டிச 08, 2024 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
சனிவார சிறப்பையொட்டி சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நடந்த வைபவத்தில் சுவாமிக்கு 17 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் மற்றும் நேத்ரா அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பித்தனர்.
மகாதேவா சிவாச்சாரியார் வழிபாடுகளை செய்து வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.