/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின் வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு வகுப்பு
/
மின் வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு வகுப்பு
ADDED : ஜூன் 20, 2025 03:57 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மின் வாரிய பணியாளர்களுக்கான சிறப்பு வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி துணை மின்நிலையத்தில், மின்வாரிய களப்பணியாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வகுப்பு நடந்தது.
கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் கணேசன் முன்னிலை வகித்தார். சின்னசேலம் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில், களப்பணியாளர்கள் மின்கம்பத்தில் ஏறும் போது தொலைபேசியில் பேசக்கூடாது; மது அருந்தி விட்டு பணியில் ஈடுபடக்கூடாது; தங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி, மின்விபத்து ஏற்படாமல் பணி செய்ய வேண்டும்; வோல்டேஜ் சென்சார் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்; என அறிவுறுத்தப்பட்டது.
இதில், உதவி செயற்பொறியாளர்கள் சுதா, முத்துகுமாரசாமி, உதவி பொறியாளர்கள் சுதாகர், மணிகண்டன், அசோக்குமார், அன்னசந்தர், சல்மாபீ, நாகப்பிரகாஷ், ராஜா, அமீது, கேசன்பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவி செயற்பொறியாளர் ஜான்போஸ்கோ நன்றி கூறினார்.