/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தின் 27 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்
/
மாவட்டத்தின் 27 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்
மாவட்டத்தின் 27 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்
மாவட்டத்தின் 27 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்
ADDED : டிச 05, 2024 05:50 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 27 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று நடக்கிறது.
பெஞ்சல் புயலால் மழைநீர் தேங்கி தொற்று நோய் பரவாமல்தடுக்க, கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் முழுவதும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின்மூலம் தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று கள்ளக்குறிச்சி வட்டம் அணைகரைக்கோட்டாலம், விளம்பார், கோட்டைமேடு, சின்னசேலம் வட்டம் கிருஷ்ணாபுரம், நாட்டார்மங்கலம், தெங்கியாநத்தம், சங்கராபுரம் வட்டம் செல்லம்பட்டு, மூங்கில்துறைப்பட்டு-அண்ணாநகர், கல்வராயன்மலை வட்டம் கிணத்துவளவு, நடு தொரடிப்பட்டு, மேல் வெள்ளிமலை, திருக்கோவிலுார் வட்டம் அவிகொளப்பாக்கம், குலதீபமங்கலம், ஆளுர், தியாகதுருகம் வட்டம் புதுபல்லகச்சேரி, தியாகை, புக்குளம் காலனி, திருநாவலுார் வட்டம் களுதுார், செம்மணங்கூர், காந்திநகர், உளுந்துார்பேட்டை வட்டம் எத்தலவாடி, வெள்ளையூர் காலனி, ரிஷிவந்தியம் வட்டம் செல்லாங்குப்பம், மண்டகப்பாடி, பேரால் ஆகிய 27 பகுதிகளில் புயல் பாதிப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கிறது, என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.