/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழை பாதித்த 54 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
/
மழை பாதித்த 54 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
மழை பாதித்த 54 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
மழை பாதித்த 54 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : டிச 06, 2024 05:55 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதித்த 54 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
பெஞ்சல் புயலால் மழைநீர் தேங்கி தொற்று நோய் பரவாமல் தடுத்திடும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுதும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை மூலம் தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று கள்ளக்குறிச்சி வட்டம் பரிகம், பரிகம் காலனி, கருணாபுரம், ஏமப்பேர், பரமநத்தம், கல்லேரிகுப்பம், சின்னசேலம் வட்டம் பாக்கம்பாடி, குரால், சின்னசேலம், தோட்டப்பாடி, காரனுார், குதிரைச்சந்தல்.
சங்கராபுரம் வட்டம் ஆரூர், திம்மனந்தல், மூக்கனுார், உலகுடையான்பட்டு, மூங்கில்துறைப்பட்டு, பொரசப்பட்டு, கல்வராயன்மலை வட்டம் கெங்கப்பாடி, ஊத்துக்காடு, அவலுார், அத்திக்குழி, மாயம்பாடி, பொட்டியம்.
திருக்கோவிலுார் வட்டம் வீரட்டாகரம், எரவலம், டி.கீரனுார், திம்மச்சூர், சோழவாண்டிபுரம், கனகனந்தல், தியாகதுருகம் வட்டம் நாகலுார், வேளாக்குறிச்சி, கோவிந்தசாமிபுரம், பிரிதிவிமங்கலம் காலனி, வரஞ்சரம், சாத்தனுார்.
திருநாவலுார் வட்டம் கழுதுார், செம்மணங்கூர், காந்திநகர், காந்திநகர், பாதுார், பாண்டூர், அரளி, சின்ன மரனோடை, பெரிய மரனோடை, உளுந்துார்பேட்டை வட்டம் குனத்துார், குன்னத்துார் காலனி, நொயனியாவாடி, பூ.மலையனுார், எறையூர், எறையூர் கல்லறை தெரு.
ரிஷிவந்தியம் வட்டம் மேலந்தல், காங்கியனுார், சித்தால், பேரால், பாசார், அரியந்தக்கா ஆகிய 54 பகுதிகளில் புயல் பாதிப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
இதில் காய்ச்சல், சளி பரிசோதனை, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மருந்துகள், உப்பு சர்க்கரை கரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்ற அத்தியாவசிய மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.