/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தனிப்பிரிவு போலீசார் பணியிட மாற்றம்
/
தனிப்பிரிவு போலீசார் பணியிட மாற்றம்
ADDED : ஆக 16, 2025 11:46 PM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனிப்பிரிவு உள்ளிட்ட 8 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷன் தனிப்பிரிவு காவலர் மனோகரன், திருநாவலுார் போலீஸ் நிலைய தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், கீழ்குப்பம் தனிப்பிரிவில் பணிபுரிந்த ராமதாஸ் சின்னசேலத்திற்கும், தியாகதுருகத்தில் பணிபுரிந்த ஆறுமுகம் கீழ்குப்பத்திற்கும், எடைக்கல்லில் பணிபுரிந்த ஆனந்தன் தியாகதுருகத்திற்கும், திருநாவலுாரில் பணிபுரிந்த சரவணன் உளுந்துார்பேட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களான பகண்டை கூட்ரோட்டில் பணிபுரிந்த சுரேஷ் மணலுார்பேட்டைக்கும், கள்ளக்குறிச்சியில் பணிபுரிந்த குணசேகரன், நாராயணன் முறையே எடைக்கல் மற்றும் பகண்டைகூட்ரோட்டிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 8 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., மாதவன் உத்தரவிட்டுள்ளார்.

