/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ராம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை
/
ராம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை
ADDED : ஏப் 01, 2025 04:53 AM

கள்ளக்குறிச்சி: ரம்ஜான் பண்டிகையொட்டி கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள ஈத்தா மைதானத்தில் நேற்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. முன்னதாக நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள ஜிம்மா பள்ளி வாசலில் இருந்து கடை வீதி வழியாக ஊர்வலமாக சென்று ஈத்கா மைதானத்தை அடைந்தனர்.
தொடர்ந்து அனைத்து பள்ளி ஜாமாத்தார்கள் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடந்தது.
நிகழ்ச்சியில் நடுத்தக்கா, அண்ணா நகர், காட்டுபுரித்தக்கா, கோட்டைமேடு, ஏ.கே.டி.,நகர், வ.உ.சி., நகர், கரியப்பா நகர் ஆகிய பள்ளி வாசல்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
சின்னசேலம்
அம்சாகுளம் பள்ளி வாசலிருந்து சேலம் மெயின் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று மூங்கில்பாடி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர். தொடர்ந்து அம்சாகுளம் பள்ளி வாசல், நடுபள்ளி பள்ளி வாசல், அண்ணா நகர் பள்ளிவாசல், கிழக்கு பள்ளிவாசல் மற்றும் 22 கிராமங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம்
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பிலிருந்து ஊர்வலமாக பூட்டை ரோடில் உள்ள ஈத்கா மைதானத்தை அடைந்தனர். அங்கு சிறப்பு தொழுகை நடந்தது. பின் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
திருக்கோவிலுார்
சந்தைப்பேட்டை ஈத்கா மைதானத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. முகமது ஜாபர் மவுலானா தலைமையில், இமாம் ஆஷிப் உள்ளிட்டோர் சிறப்பு பிரசங்கம் செய்தனர். இமாம் ராஷித் தொழுகையை முன்நின்று நடத்தினார்.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.