/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சியினருடன் கலந்தாய்வு
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சியினருடன் கலந்தாய்வு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சியினருடன் கலந்தாய்வு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சியினருடன் கலந்தாய்வு
ADDED : அக் 31, 2025 02:39 AM

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2025 ஜன., மாதம் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலுடன் 2002ல் வெளியான சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் அடிப்படையில் சரிபார்ப்பு மற்றும் பொருத்துதல், இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
சிறப்பு தீவிர திருத்த நிலைகளான கணக்கெடுப்பு முன்கட்டம், கணக்கெடுப்பு கட்டம், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, அறிவிப்பு வழங்குதல் மற்றும் முடிவெடுத்தல், உரிமைகோரல்கள் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் இணைந்து வரைவு வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து திருத்தங்கள், நீக்கங்கள் மற்றும் சேர்த்தல் போன்ற தேவையான மாற்றங்களை அடையாளம் காண்பர்.
எனவே, சிறப்பு தீவிர பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அரசியல் கட்சியினர் கருத்துக்கள் கேட்டறிந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனலட்சுமி, ஓட்டுபதிவு அலுவலர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

