/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலத்தில் வார்டு சிறப்பு கூட்டம்
/
சின்னசேலத்தில் வார்டு சிறப்பு கூட்டம்
ADDED : அக் 29, 2025 11:27 PM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பேரூராட்சி 3வது வார்டு திரு.வி.க., நகரில் வார்டு சபை சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். பேரரூாட்சி இளநிலை உதவியாளர் கிருஷ்ணவேணி, துப்புரவு அலுவலர் முத்துகுமாரன் முன்னிலை வகித்தனர். பொதுமக்களிடையே குடிநீர், சாக்கடை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பாக குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் காந்தி, பத்மாவதி, சிவகுமார், சிவசக்தி, ரவி, துப்புரவு மேற்பார்வையாளர் சீனிவாசன், ரமேஷ், ஊழியர்கள் ராஜேஸ்வரி, புஷ்பலதா, செவ்வந்தி மற்றும் வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

