/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

ADDED : அக் 29, 2025 09:13 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்.
வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி சுமதி, 48; கடந்த 26ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற சுமதி நேற்று வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பின்புற கதவு திறந்த கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பூஜை அறையில் வைத்திருந்த 6 சவரன் தங்க நகை, ரூ. 1.30 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.