ADDED : அக் 29, 2025 09:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலத்தில் சிறுவனிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் ஆர். சி., தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுவன நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விஷ்வா, 23; மற்றும் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் தனியாக இருந்த சிறுவன் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு 16 வயது சிறுவனை மாடிக்கு அழைத்து சென்று, ரூ. 10 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டினர். 16 வயது சிறுவன் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த இருவரும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், விஷ்வா மற்றும் 17 வயது சிறுவன் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விஷ்வாவை நேற்று கைது செய்தனர்.

