நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, சாமியார் மடம் திருநீற்றம்மை உடனருள் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி, நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நடராஜ பெருமானுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். வைபவங்களை கோவில் நிர்வாகி நாச்சியப்பன் செய்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் திருக்கூட்டத்தினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

