/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆற்றுப் பாலத்தின் உறுதித்தன்மை: தலைமைப் பொறியாளர் ஆய்வு
/
ஆற்றுப் பாலத்தின் உறுதித்தன்மை: தலைமைப் பொறியாளர் ஆய்வு
ஆற்றுப் பாலத்தின் உறுதித்தன்மை: தலைமைப் பொறியாளர் ஆய்வு
ஆற்றுப் பாலத்தின் உறுதித்தன்மை: தலைமைப் பொறியாளர் ஆய்வு
ADDED : ஜன 22, 2024 12:48 AM

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே ஆற்றுப் பாலத்தின் உறுதித் தன்மையை நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி, நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே மூங்கில் துறைப்பட்டு ஆற்று பாலம் உள்ளது.
இந்த பாலத்தின் உறுதித் தன்மையை சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (திட்டங்கள் வடிவமைப்பு) சேகர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் நாகராஜன், சங்கராபுரம் உதவி கோட்டப் பொறியாளர் சிவசுப்ரமணியன் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.