/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்
/
தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்
தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்
தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்
ADDED : ஆக 09, 2025 11:28 PM

தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது.
முகாமினை கலெக்டர் பிரசாந்த், மலையரசன் எம்.பி., ஆகியோர் தலைமை தாங்கி துவக்கி வைத்தனர். மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணை சேர்மன் நெடுஞ்செழியன், அத்மா குழு தலைவர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.
முகாமில் பொது மருத்துவம், இதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு, குழந்தைகள், நுரையீரல், அறுவை சிகிச்சை, கண், காது மூக்கு தொண்டை, மனநலம், பல், சித்தா, இயன்முறை சிகிச்சை, கதிர்இயக்க சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட 17 வகை மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. மேலும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு எக்கோ கார்டியோகிராம், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நேற்றைய முகாமில் 1,500 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 வட்டாரங்களிலும், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த மருத்துவ முகாமினை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான மருத்துவ சேவையினை பெற்று பயனடைய வேண்டுமென கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.
முகாமில் தியாகதுருகம் பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, டாக்டர் பங்கஜம், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.